மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் இருந்து எப்படி அல்லாஹ் பாதுகாத்தான்

 


*எகிப்து நாட்டில் பனீ இஸ்ரவேல் கூடத்தில் தலைவனாக இருந்தவன் தான் ஃபிர்அவ்ன்.

மிகவும் கொடூரமான முறையில் ஆட்சி புரிந்துகொன்டிருந்தான். எந்த அளவு அவன் அட்டூழியம் இருக்குமென்றால் ஒரு கட்டத்தில் நான் தான் ரப்பு (வணக்கத்துக்குரியவன்) என்று கூறும் அளவு அவன் அட்டூழியம் தலைதூக்கி இருந்தது.


*அந்த நேரத்தில் தான் ஃபிர்அவ்னுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.பனீ இஸ்ரவேல் கூடத்தில் பிறக்கும் ஒரு ஆணின் மூலம் ஃபிர்அவ்னின் ஆட்சி அதிகாரம் எல்லாம் இல்லாமல் போகும் என்ற செய்தி கிடைத்ததில் இருந்து,


*அவனிடம் பனி புரியும் அடிமை பெண்களை வைத்து எந்த பெண் கற்பமுற்றுள்ளாள் என்பதை அறிந்து அந்த குழந்தை பிறக்கும் நேரம் ஆண் குழந்தையாக இருந்தால் அவன் அடியார்களை வைத்து கொன்றுதீர்த்தான்.


*அப்போது அவனிடம் சொல்லப்பட்டது இப்படி எல்லா ஆண்களையும் கொன்றாள் இஸ்ரவேல் கூடத்தில் பலசாலிகள் எல்லாம் அழிந்துவிடுவார்கள், அவர்கள் செய்யும் கடினமான வேலைகளைச் செய்ய பெண்களால் முடியாமல் போகும் என்ற தகவல் சொல்லப்பட்டது.



உடனே ஃபிர்அவ்ன் முடிவெடுத்தான் ஒரு வருடம் கொலை செய்யவும் அடுத்த வருடம் பிறக்கும் ஆண் குழந்தைகளை விட்டுவிடுவதாகவும்.


*கொலை செய்யாத வருடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.

கொலை செய்யும் வருடம் தான் பிறந்தார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.




*மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததும் குழந்தை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இருந்த இரக்கம் பாசம் காரணமாக தாயார் ஃபிர்அவ்னின் கூட்டம் விஷயம் அறிந்து குழந்தையை கொன்றுவிடுவார்கள் என்று மிகவும் பயமும் கலவையுடனும் இருக்க அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயாருக்கு வஹீ அறிவித்தான்  குழந்தையை என்னி பயம் கவலை கொள்ள வேண்டாம் அந்த குழந்தையை நயில் நதியில் போடுமாறு,நயில் நதி அவள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்ததால் அவள் அவசரமாக ஒரு தொட்டி போன்று படகு செய்து அதில் குழந்தையை வைத்து ஆற்றில் போட்டுவிட்டாள்.




*அந்த தொட்டி நேராக ஃபிர்அவ்னின் மாளிகை பக்கம் செல்ல அங்கிருந்த பணிப்பெண்கள் அந்த தொட்டியை எடுத்து ஃபிர்அவ்னின் மனைவியிடம் கொடுத்தனர்.


*ஃபிர்அவ்னின் மனைவி அந்த குழந்தையை கண்டதும் அல்லாஹ் ஃபிர்அவ்னின் மறைவிற்கு அக்குழந்தை மீது பாசத்தையும் நம்பிக்கையும் கொடுத்தான். 


*உடனே ஃபிர்அவ்னின் மனைவி அந்த குழந்தையை பிர்அவ்னிடம் எடுத்து சென்று இக்குழந்தையை நாங்களே வளர்க்கலாம், இது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி பிர்அவ்னும் ஏற்றுக்கொள்ளும்படி அல்லாஹ் ஏற்பாடு செய்தான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஃபிர்அவ்னின் மாளிகையில் வைத்தே அல்லாஹ் பாதுகாத்தான்.••


SHAHINA NIZAR

GRADE 9_AL HUDA MUSLIM COLLEGE

RAMBUKANDANA RIDEEGAMA

Comments

Popular Posts