மனைவியின் பெயருடன் கனவரின் பெயரை சேர்த்து கூப்பிடலாமா?
பொதுவாகவே எங்கள் பழக்கத்தில் இருப்பது தான் திருமணமான பிறகு மனைவியின் பெயருடன் கனவரின் பெயரை வைத்து அழைப்பது இதற்கு இஸ்லாத்தில் எந்தவித அனுமதியும் இல்லை.
கணவரை தந்தையின் இடத்தில் வைத்து பார்ப்பதை போன்று.
இது சுத்தமான ஹராமாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள், அப்போது சிலர் அவரை நபியவர்களின் பெயரை இனைத்து அழைக்க அல்லாஹ் குர்ஆன் ஆயத்தை இரக்கினான்.
(ادعوهم لآبائهم)
(அவர்களின் தந்தையின் பெயர் சொல்லியே அழையுங்கள்,)
கனவரை பார்த்து என் தந்தையை போன்று என்று சொல்வது, மனைவியை பார்த்து என் தாயை போன்று என்று சொல்வது தலாக் கில் சேர்த்துவிடும்.
அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்


Comments
Post a Comment