மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா
மாதவிடாய் காலம், மற்றும் குழந்தை பெற்ற பிறகு இரத்தம் வெளியேறும் காலங்களில் குர்ஆன் ஓதுவது தடை என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்,
அவர்கள் ஆதாரமாக காட்டும் ஹதீஸ் பழகீனமான ஒரு ஹதீஸ்.
நபி ஸல் அவர்கள் ஆயிஷா ரழி அவர்களுக்கு ஹஜ்ஜுடைய நேரத்தில் மாதவிடாய் காலம் ஆயிஷா ரழி அவர்களுக்கு கூறினார்கள் நீங்கள் தவாபை தவிர ஹாஜிகள் செய்யும் மற்ற எல்லா வழக்கங்களையும் செய்யுமாறு கூறினார்கள்.
அதில் குர்ஆன் ஓதுவது பற்றி எதுவும் நபி ஸல் அவர்கள் கூறவில்லை.
தவாபை மாத்திரம் கூறினார்கள் ஏனென்றால் தவாஃப் தொழுகைக்கு சமமான ஒரு அமல்.
குளிப்பு கடமையாக இருப்பவருக்கு குர்ஆன் ஓதுவது தடை செய்யப்பட்டுள்ளது ஏனென்றால் அது ஒரு சிறிய நேரம் தான் அவர் எப்பொழுது குளித்துவிடுகிறாரோ அப்போதே அவர் சுத்தமாகி விடுகிறார்.
குர்ஆனில் மனனம் செய்து இருக்கும் பகுதியில் ஓதுவதற்கு எந்த தடையும் இல்லை.
குர்ஆனை தொடுவது ஆதாரபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மனனம் செய்தவற்றை பெண்களுக்கு தாராளமாக ஓதிக்கொல்லாம்.
விஷேசமாக நோன்பு காலத்தில் குர்ஆன் ஓதுவது பற்றி பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் இது.


Comments
Post a Comment