மாதவிடாய் பெண்களுக்கு இஸ்லாத்தில் ஆகுமான விடயங்கள்
கேள்வி: மாதவிடாய் பெண்களுக்கு மய்யத்தில் களந்துகொள்ள முடியுமா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாதவிடாய் பெண்களுக்கு தொழுகை, தவாஃப், நோன்பு, மேலும் குர்ஆனை தொடுவது இவைகள் மாத்திரமே தடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய வழமையான அமல்களில் களந்து கொள்ளலாம்.குர்ஆன் சுமக்காமல் மனனத்தால் ஓதுவது, இஸ்லாமிய மஞ்லிஸ்களில் களந்துகொள்வது மய்யத்து வீடுகளுக்கு சமூகளிப்பது போன்ற ஏனைய வழமையான அமல்கள் செய்ய மார்கத்தில் அனுமதி உண்டு.
(நபி ஸல்) அவர்கள் ஹஜ்ஜுடைய நேரத்தில் கூட ஹாஜிகள் செய்யும் எல்லா அமல்களையும் செய்யுமாறு கட்டளை விடுத்தார்கள்.
தவாஃப் செய்வதை தடுத்தார்கள்.
தவாஃப் தொழுகையை போன்ற ஒரு அமல் என்பதால்.
அல்லாஹ் அஃலம்

Comments
Post a Comment